தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 17 maart 2017

புரட்சிகர மக்கள் இராணுவம் புலிகளின் தலைமையில் எனும் தலைப்போடு 1984இல் “விடுதலைப் புலிகள்”

தமிழிழ விடுதலைப் புலிகளின் ஊடக்துரையினர் 1984-03-15 ஆம் திகதி அதாவது இன்றைக்கு 33 வருடங்களுக்கு முன்னர் “விடுதலைப் புலிகள்” என்னும் அதிகாரபூர்வமான ஏடு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
“புரட்சிகர மக்கள் இராணுவம் புலிகளின் தலைமையில் உருவாகின்றது” என்னும் தலைப்பு செய்தியுடன் குறித்த பத்திரிகை வெளியாகி இருந்தது.
இந்தப் பத்திரிகை 19ஆம் நூற்றாண்டு அதாவது 1984ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த நிலையில் அப்பத்திரிகையில் 19ஆம் நூற்றாண்டு குறித்துக்காட்டவில்லை தனியே 84-03-15 என்றே குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த பத்திரிகை 100 வருடத்தின் பின்னர் அதாவது 2084 ஆண்டு அது புதிய பிறப்பு எடுக்கும்.
அப்பொழுதும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளும் தீர்க்கப்படாமல் அப்படியே தொடரலாம் என்று கருதப்படுகின்றது.
ஏனெனில் சமநேர அரசியல் இராஜதந்திர செயற்பாடுகள் தமிழ்மக்களை மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் எரிச்சலூட்டி நம்பிக்கை இழக்கச் செய்து நிற்கின்றது.
இந்நிலை தொடர்வது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமாக அமையாது என்று சமுக நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டுகின்றனர்
தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை இலங்கை அரசாங்கம் மீறுகின்றது என்ற செய்தியினை விடுதலைப் புலிகள் தமது ஊடக வாயிலாக வெளியீட்டு வைத்து இன்றுடன் 33 வருடங்களாகியும் தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் இன்றுவரை தீர்த்து வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten