தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 maart 2017

6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை: டிரம்ப் மீண்டும் அதிரடி

அமெரிக்காவின் ஜனாதிபதியான டிரம்ப் தீவிரவாதிகளை ஆதரிக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் குடியேற முடியாது என்ற புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாட்டு அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். இதனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பின்பு இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டிற்கு மட்டும் டிரம்ப் இந்த தடையை உடைத்தார்.
இந்நிலையில் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 6 நாடுகளிலிருந்து, அமெரிக்க குடியேற்றத்தைத் தடை செய்து புதிய குடியேற்ற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதில் ஏமன், சிரியா, இரான், சூடான், லிபியா, சோமாலிய ஆகிய ஆறு நாடுகளில் அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடுத்த 90 நாட்களுக்கு யாரும் குடியேற முடியாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தகுந்த விசா அனுமதியோடு குடியிருப்பவர்கள் மற்றும் க்ரீன் கார்டு ஹோல்டர்களுக்கு விதி விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புது உத்தரவு வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரியிலும் இது போன்ற ஒரு உத்தரவை, கால அவகாசம் தராமல் உடனடியாக டிரம்ப் அமல்படுத்தியது பலவித குழப்பங்களை ஏற்படுத்தியதோடு, கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தது. அதிலிருந்து சில மாற்றங்களை செய்து இந்த புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இராக் விடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Geen opmerkingen:

Een reactie posten