தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 maart 2017

ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் மத நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மதங்களை சேர்ந்த ஊழியர்கள் தங்களது மத நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் பணிபுரியும் நிறுவனங்களில் உடை அணிவது ஒருவித கலாச்சராமாகவே பார்த்து வருகின்றனர்.
ஆனால் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இதுபோன்று மதத்தை வெளிப்படுத்தும் அடையாங்களை அணியக்கூடாது என வலிறுத்து வருகின்றன.
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இதுபோன்ற விவகாரங்களில் சிக்கிய இரண்டு பெண்களை நிறுவனங்கள் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
ஆனால் இந்த இரண்டு பெண்களும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று ஐரோப்பிய உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது மதத்தை பிரதிபலிக்கும் அடையாளங்களை ஊழியர்கள் அணிவதற்கு நிறுவனங்கள் தடை விதிப்பதில் தவறு இல்லை.
பணிபுரியும் நிறுவனங்களில் மதத்தை காட்டும் அடையாளங்களுடன் ஊழியர்கள் வருவது சரியானது அல்ல எனக் கூறி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நீதிபதியின் இத்தீர்ப்பானது பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten