தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 maart 2017

பிரித்தானியா தாக்குதல் பதற்றத்தில் ஓடிய பிரதமர்!

பிரித்தானியாவின் பாராளுமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் அந்தநாட்டு மக்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கி இருந்தது.
இந்நிலையில், தாக்குதலின் போது பிரித்தானிய பிரதமர் தெரெசா மே, உடனடியாக அவரது பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் உடனடியாக பதற்றத்தில் ஓடிச்செல்லும் காணொளியானது தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கொடூர வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பிரார்த்தனைகள் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ராணி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்களை, பிரதமர் தெரீசா மே, மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில், 12 பேர் பிரித்தானியர்கள் என்றும் 3 பிரான்ஸ் சிறுவர்கள், இரண்டு ரூமேனியர்கள், நான்கு தென் கொரியர்கள், இரண்டு கிரேக்கர்கள், தலா ஒரு ஜெர்மன், போலந்து, அயர்லாந்து, சீனா, இத்தாலி, அமெரிக்கா நாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பர்மிங்காம், கிழக்கு லண்டன், வேல்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten