தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 maart 2017

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை

ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி அவரிடமே தங்கள் குடும்பத்தவர்கள் சரணடைந்தனர் எனத் தெரிவிக்க முடியும் என கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான கதைகள் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் உருவாக்கப்பட்ட கதைகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ள காணாமல்போனோர் அலுவலகம் யதார்த்த பூர்வமற்ற ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணமற்போனவர்கள் குறித்த பல சம்பவங்கள் உள்ளன. அதில் ஓர் சம்பவத்தையே நான் நவநீதம்பிள்ளையிடம் சுட்டிக்காட்டினேன். யுத்தத்தில் தங்கள் குடும்பத்தவர்கள் இறந்ததை ஏற்பதற்கு எப்படி பெற்றோர்கள் தயாரில்லை என்பதையும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என அவர்கள் நம்புவதையும் நான சுட்டிக்காட்டியுள்ளேன்.
இளைஞர்கள், யுவதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணையும்போது அவர்களது பெற்றோர்கள் அங்கு இருப்பதில்லை.தங்கள் பிள்ளைகள் எங்கிருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.
இதன்காரணமாக அவர்கள் மோதலில் சொல்லப்பட்டதும், அவர்களின் உடல்கள் மீட்கப்படாதபோது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக கருதுகின்றனர்.
ஸ்ரீலங்காவில் இரகசிய முகாம்கள் என்று எவையும் இல்லாதபோதிலும் இந்தப்பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தனர். அவரும் அதனை நம்பினார்.
காணாமற்போனவர்களில் சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதற்கான உதாரணத்தை நான் நவநீதம் பிள்ளையிடம் முன்வைத்தேன்.
காணாமற்போனவர்கள் விவகாரம் விசாரணை செய்வதற்கு இலகுவான ஒன்றல்ல.அதுவும் மிகவும் குழப்பகரமானது.
இதேவேளை இராணுவத்திடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எதுவும் இல்லை.மக்கள் பல வதந்திகளை அடிப்படையாக வைத்து பல கதைகளை முன்வைத்தனர். அவர்கள் சிலர் சொன்னதாகவே தெரிவித்திருந்தனர்.
சரணடைவதைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை.யுத்தத்தின் யதார்த்தம் இதுவே. இவற்றை நம்பமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten