இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாயொருவர் மயக்கமடைந்து விழுந்தமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் அம்பியூலன்ஸ் மூலம் கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு குறித்த தாயார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையின் நினைவுகள் வரும்போதெல்லாம் இவ்வாறு மயக்கமடைவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதற்காக பிரத்தியேக வைத்தியர் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten