தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 maart 2017

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளவாய கொடவெஹரகள பகுதியில் வைத்து குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பெண் உறுப்பினர் ஒருவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் அந்த பகுதிக்கு சென்றமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும், படையினரிடம் சரணடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten