தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 maart 2017

பிரித்தானியாவிலுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் நீங்கள் வீடு வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளராக இருந்தால், நீங்கள் பின்வரும் சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.
இந்தப் புதிய சட்டம் 06 ஏப்ரல் 2017 இலிருந்து நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், சில சட்டத்திருங்கள் 01 ஒக்டோபர் 2017 இலிருந்தும் நடைமுறைக்கு வருகின்றது.
இந்தப் புதிய சட்டத்தின் நோக்கம் வாடகைக்கு வீடு விடும் நேர்மையற்ற உரிமையாளர்களை மிகவும் திறம்பட கட்டுப்படுத்துவதாகும்.
இந்தச் சட்டம் குற்றச் செயல்களுக்கு பல கூடுதலான தண்டனைகளை வழங்கும்படியாக அமைந்துள்ளதுடன் பின்வரும் குற்றச் செயல்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.
  • சட்ட ரீதியற்ற முறையில் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றல்.
  • கவுன்சில்களால் வசிப்பதற்கு பாதுகாப்பற்றது என்று தீர்மானிக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விடுவது.
  • ஆபத்துக்களை தடுக்கும் நோக்கில் கவுன்சில்களால் கோரப்பட்ட வேலைத் திருத்தங்களை செய்யாமல் இருப்பது.
  • சட்டவிரோதமாக இந்நாட்டில் வசிப்பவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பது.
  • குடியிருப்போர் நோக்கி வன்முறையை பிரயோகித்தல் அல்லது அவ்வாறு மிரட்டுவது.
  • பொய்யான வீட்டுவசதி நன்மை விண்ணப்பங்கள் மேற்கொள்வது அத்துடன், அடையாள மாற்று களவுகள் செய்தல்.
  • கஞ்சா உற்பத்திக்கு காணிகளை வீடுகளைப் பயன்படுத்துதல்.
  • களவு மற்றும் குற்றவியல் சேதங்கள் ஏற்படுத்துதல்.
  • குடியிருப்பவர்களுடன் சேர்ந்து வரிசெலுத்தாமல் தவிர்த்தல் மற்றும் சட்டவிரோதமான போதைமருந்துகள் விநியோகித்தல்.
இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டால், பின்வரும் தண்டனைகளை எதிர்கொள்ளலாம்.
இந்த ஓடர் நீதிமன்றத்தினால் அமுல்படுத்தப்படும். வீடுகளை வாடகைக்கு விடமுடியாதவாறும், வாடகைக்கு விடும் முகவராக செயற்படுவதையும் தடைசெய்யும் வகையில் இந்த உத்தரவு அமையும்.
குறைந்தது 12 மாதங்களுக்கு இந்த தடை அமுல்படுத்தப்படும். இந்த ஓடரை மீறிச் செயற்பட்டால், 51 வாரங்கள் வரை சிறை செல்லக்கூடிய குற்றவியல் தண்டனை வழங்கப்படலாம்.
அத்துடன் 30,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
அத்துடன் உரிமையாளர்களுடைய விபரங்கள் Secretary of State ஆல் உருவாக்கப்படும் மோசமான வீட்டுஉரிமைக்காரர்கள் என்ற Nata Base இல் பதிவுசெய்யப்படும். உங்கள் கவுன்சில்கள் இவ்வாறானவர்களுடைய விபரங்களை இதில் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும்.
இந்த உத்தரவின் மூலம் நீதிமன்றம் வீட்டு உரிமையாளர்கள் பெற்ற வாடகைகளை மீண்டும் திருப்பி கொடுக்கும் படி பணிக்கும். ஆகக் கூடுதலாக 12 மாதங்கள் வரையான வாடகையை திருப்பி உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இன்னும் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள் தொடர்பான மேலதிக செய்திகள் லங்காசிறியில் தொடர்ந்தும் பிரசுரிக்கப்படும்.
மேலதிக தகவல்கள் தேவைப்படின், நீங்கள் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளராக இருந்தால் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 10 நிமிட சட்ட ஆலோசனை வழங்கப்படும். நீங்கள் தமிழிலும் உரையாடலாம்.
JAY VISVA SOLICITORS
First Floor
784 Uxbridge Road
Middlesex
UB4 0RS
Tel: 020 8573 6673 
http://www.tamilwin.com/uk/01/140664?ref=lankasri-home-dekstop

Geen opmerkingen:

Een reactie posten