105 நிமிடங்களைக் கொண்ட திரைப்படத்தை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட படத் தயாரிப்பாளரான Sherine Xavier என்ற பெண்ணே இயக்கியுள்ளார்.
இது தொடர்பில் இயக்குனர், தெரிவித்தததாவது,
இந்த படத்தை திரையிடுவதால் இலங்கையின் அச்சுறுத்துலுககு முகங்கொடுக்கு நேரிடும்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தன் கணவனைத் தேடி மூன்று பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுப்படும் பெண் தொடர்பான கதையே முற்றுப்புள்ளியா என திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தொடர்பான படப்பிடிப்பு 2014 ம் ஆண்டு ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமிழ்நாடு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது.
2015ம் ஆண்டு ஜூலை மாதம் குறித்த திரைப்படத்தில் படபப்பிடிப்புகள் நிறைவுக்கு வந்தது.
வெற்றிகரமாக படத்தை இயக்கிய பின்னரும், பட தணிக்கையின் போது பல தடைகளை எதிர்கொண்டேன்.
தற்போது தணிக்கை நிறைவுக்கு வந்துள்ளமையால் குறித்த திரைப்படத்தை இந்தியாவில் திரையிட விரும்புகின்றேன்.
இது தமிழர்களின் கதை எனவே, தமிழ்நாட்டில் திரையிட வேண்டும்,
படத்தின் கலாச்சார முக்கியத்துவம் தொடர்பில் புரிந்து கொள்ளும் ஒரு விநியோகஸ்தர் இந்த படத்தை திரையிட முன் வர வேண்டும் என்று தான் நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த படத்தை திரையிடுவதற்காக மும்பை சென்று போது Sherine Xavier இந்த தகவல்களை வெளியிட்டார்.
இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதி ஒரு கண்ணாடி என்றும், உண்மையை மட்டுமே திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten