தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 maart 2017

பெற்றோரின் பாசப்போராட்டத்தை தவிடுபொடியாக்கிய நீதிமன்றம்..!

இதுதான் மேற்குலகில் வாழும் நம்மவரின் நிலை கூட!
பிள்ளையை அடித்தால்,பிள்ளை தவறாக நடந்தால்...பிள்ளையை அரசு பறித்து தனக்கு பிடித்தவரிடம் கொடுத்து வளர்க்கும்,அது அங்கு ஒருவிதத்தில் நியாயமே,காரணம் பிள்ளை பிறந்ததில் இருந்து அரசு பிள்ளைக்கு உதவி செய்வதால் இந்த நிலை!மக்கள் வாக்களித்து உருவான சட்டம் சொல்வதைத்தானே அரசு செய்கின்றது!ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தவரும்  அரசின் சட்டத்திற்கு பலியாவதே இங்குள்ள  அவலம்!பெற்றெடுத்த  பெற்றோர் இருக்கும் போதே, அவர்களால் குழந்தையை வளர்க்கமுடியாதென நீதிமன்றம் தீர்ப்பளித்து குழந்தையை வளர்ப்பு பெற்றோருக்கு கையளித்துள்ள சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் மிரபெல்லா மொன்பொருட்டே பகுதியிலுள்ள 57 வயது கேப்ரில்லாவும், 69 வயதாகும் அவரது கணவர் லூகி அம்ப்ரோசிஸும், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால், ஒரு குழந்தையை தத்தெடுக்க முயன்றனர். இருப்பினும் வயதானவர்களுக்கு தத்தெடுக்கும் உரிமையில்லை என இத்தாலிய சட்டமொன்று உள்ளது.

குறித்த தம்பதியினர் கடந்த 2008ஆம் ஆண்டு, குழந்தை ஒன்றை செயற்கை கருத்தரித்தல் முறையின் மூலம் பெறவே, குழந்தையின் 18 மாதங்கள் நிறைவடைந்தநிலையில், அயலவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் குழந்தையை மாற்று பெற்றோரிடம் கொடுப்பதற்கு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த தம்பதியினர் உறவினர், அயலவர்களின் எதிர்ப்பை தாண்டி, குழந்தையை மிகவும் கவனமாகவும், அன்பாகவும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தையுடன், கேப்ரில்லாவும் லூகியும் வெளி பயணமொன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்படவே, காரில் குழந்தையை விட்டுவிட்டு குழந்தைக்கான பொருட்களை எடுத்துவர சென்றதை பார்த்த அயலவர்கள், குழந்தையை வயதான தம்பதியினரால் பராமரிக்க முடியாது என முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.

வழக்கை விசாரித்துள்ள நீதிமன்றம், “ஒரு குழந்தையை வளர்க்கும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை. அதனால் நீங்கள் பெற்ற குழந்தையாக இருந்தாலும் உங்களிடம் கொடுக்க முடியாது. இளம் தம்பதியர் யாருக்காவது குழந்தையை தத்து கொடுத்துவிட வேண்டும். இது பெற்றோருக்கு துயரமான விடயமாயினும் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம்” என தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு குறித்த பெற்றோர் செய்த மேல்முறையீட்டை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு சாதகமான தீர்ப்பை பெற்றாலும், 5 வருடங்களாக வேறு பெற்றோருடன் இருந்த குழந்தை மீண்டும் மாற்றப்பட்டால் குழந்தையின் மன நிலை பாதிக்கப்படுமென கூறி, குழந்தையைக் திருப்பிக் கொடுக்க நீதிமன்றின் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து போராட்டங்களுக்கு மத்தியிலும் 75 வயதான லூகியும் 63 வயதாகும் கேப்ரில்லாவும், தமது 7 வயது மகளை வளர்ப்பதற்கான அனுமதியை கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்து பாசப்போராட்டத்தை தொடர காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



16 Mar 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1489700018&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten