பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விபரங்களை கவனிக்க வேண்டியது முக்கியமானதே ஆனால் அகதிகள் கோரிக்கையாளர்களை மனிதாபிமானத்தோடு அணுகி அது தொடர்பான நடைமுறைகளை கையாளுவதற்கு அந்த அரசு முயலவில்லை என்றும்
இன்று தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு வழங்கி பேட்டியில் “நீங்கள் இப்போது சிரிய அகதிகளை நடாத்துவது போல 2009ல் அப்போதைய அரசு தமிழ் அகதிகளை நடாத்தவில்லையே?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இவ்வாறு தெரிவித்தார்.
தமிழை அச்சுப்பிசகாமல் உச்சரிக்கின்ற உங்களின் தகமையால் உங்களின் தைப் பொங்கல் வாழ்த்து பல்லாயிரக்கணக்கானோரைச் சென்றடைந்தது என பேட்டி கண்டவர் குறிப்பிட்ட போது,
நான் தெரிவித்த பொங்கல் வாழ்த்து பல்லாயிரக்கணக்கானோரை சென்றடைந்ததற்கான காரணம் நான் தைப்பொங்கலிற்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. அதனை எங்களின் விழாவாகக் கொண்டாடினேன். அது தான் கனடியர்களின் வழக்கம். அதேபோல ஏப்ரல் 13ம் தேதி தமிழ் புத்தாண்டையும் கொண்டாடப் போகின்றேன் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தனது லிபரல் கட்சியிலிருந்து ஓய்வுபெறும் 5 ஆண்களின் இடத்திற்கு இப்போது 4 பெண்களும் ஒரு ஆணுமாக எனது கட்சியிலிருந்து போட்டியிடுகின்றார்கள். பாலிணச் சமத்துவத்தை கொண்டுவர வேண்டிய காலத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதனையே செய்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள பல கல்விச்சபைகளும் தங்கள் பாடசாலைகளில் ;பாலிணச் சமத்துவத்துவதற்கு கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்களின் அமைச்சரவையை உதாரணம் காட்டி வருகின்றன.
அவரது அமைச்சரவையில் அரைவிழுக்காடு ஆண்களும், அரைவிழுக்காடு பெண்களுமிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டில் தமிழர்கள் வருகை தந்த கப்பலில் கனடியப் பிரதமர் நிற்கின்ற படத்தையும், தமிழர்கள் இறங்கிவருகின்ற படத்தையும் 2011ம் ஆண்டுத் தேர்தல்ப் பிரச்சாரத்திற்கு தமிழர்கள் வாழும் ஒன்றாரியோ, கியூபெக் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கண்சவேட்டிவ் கட்சி விளம்பரங்களில் பயன்படுத்தி எதிர்மறைப் பிரச்சாரத்தைச் செய்தது.
இதனை கனடாவின் தமிழ் அமைப்புக்கள் கண்டித்து அந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டுனெக் கோரிய போதும் அதனை கண்சவேட்டிவ் கட்சி கருத்திலெடுக்கவில்லை. தமிழர்களை எதிர்மறையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட அந்தப் பிரச்சாரம் அவர்களிற்கு ஏனைய மாகணங்களில் 2011ல் வெற்றியைத் தேடித் தந்தது.
http://www.canadamirror.com/canada/84115.html
Geen opmerkingen:
Een reactie posten