தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 maart 2017

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல; ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்க மறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலிலிருந்து நீக்க மறுக்கும் வகையிலான தீர்ப்பொன்றினை ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அத்துடன் சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கான பட்டியலில் இணைந்திருந்தது.

இதன் பிரகாரம், போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக நெதர்லாந்தில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட நால்வரை இறுக்கமான நடைமுறைக்குள் அடக்கியிருந்ததோடு, அவர்களின் நிதிச் சொத்துக்களும் முடக்கப்பட்டிருந்தன.

ஆனால், நெதர்லாந்தின் நீதிமன்றில் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்த இந்த நால்வரும், நெதர்லாந்து அரசின் இந்த நடவடிக்கை தவறு என்றும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கருதப்படக்கூடாது என்று வாதிட்டிருந்தார்கள்.

அத்துடன் விடுதலைப் புலிகள் அரச-சார்பற்ற ஒரு ஆயுதக் குழு என்றும், ஸ்ரீலங்காவில் சர்வதேசத்தைச் சாராத ஆயுதப் பிணக்கில் ஈடுப்பட்டிருந்தார்கள் என்றும் அவர்கள் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

அதுமாத்திரமன்றி அவர்களுடைய செயற்பாடுகள் சர்வதேச மனித நேயச் சட்டங்களின் கீழேயே இடம்பெற்றிருந்தன என்றும், ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்களின் கீழோ அல்லது சர்வதேச பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் கீழோ அல்ல என்றும் இந்த நால்வரும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் வாதிட்டிருந்தார்கள்.

இதனையடுத்து நெதர்லாந்து அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் என்பதால் வகைப்படுத்தப்படும் விடயங்கள் என்ன என்ற விளக்கத்தினை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிடம் கோரியிருந்தது.

இது குறித்த தீர்ப்பினை இன்று வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கருதப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை நிராகரித்துள்ளது.

அது மட்டுமன்றி, இந்த நால்வரின் மீதும் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான நடவடிக்கைகள் ஒரு தடை நடவடிக்கை அல்ல என்றும், தற்காப்பு நடைமுறை மட்டுமே என்றும் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகளுக்குள் உள்ளடக்கப்படலாம் என்பதால் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பட்டியலுக்குள் அடக்கப்படலாம் என்றும், அந்த வகையில் அவர்களது நிதி முடக்கத்தில் பாதிப்பினை எதனையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்திருக்கிறது.
15 Mar 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1489576645&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten