தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 maart 2017

பலாலியில் அரசாங்கம் சுவீகரித்த காணிகளின் உரிமையாளர்களுக்கு ஓர் அறிவித்தல்...!

பலாலி விமனநிலையத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை, காணி அமைந்துள்ள கிராம அலுவலர்களிடம் பதியுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த1952 மற்றும் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்தினால் 956 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டது.
அவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கில் தற்போது காணிகளின் உரிமையாளர்களை இனம்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலாலியில் கடந்த மாதம், பாது­காப்பு அமைச்­சின் மேல­திக செய­லர் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமை­வா­கவே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
இவ்வாறு காணிகள் சுவீகரிக்கப்படும் பொழுது அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் ஒரு அங்கமாகவே சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­களை இனம் கண்டு அவர்­களைச் சொந்த நிலத்­துக்கு அழைத்­துச் சென்று காண்­பிக்­கப்­ப­ட்டு அவர்­க­ளுக்­கான இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவை வழங்­கு­வதே இதன் நோக்­கம் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

Geen opmerkingen:

Een reactie posten