குறித்த மசோதா பிரித்தானியா பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்தின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாக முடிவெடுத்ததால் குறித்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அரசாங்கம் சட்ட விதி 50 தூண்டி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற வழிவகுத்துள்ளது.
இந்த மசோதா அரச ஒப்புதலுடன் இன்று சட்டமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பிரித்தானியா பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தையை திரும்பப் பெற்று பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கையை தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten