ஒன்றாரியோவிலுள்ள தமிழர்களதும், சீக்கியர்களதும் வாக்குக்களை வெற்றி கொள்வதில் கட்சிகளின் தலைவர்களாக வரவிரும்பும் அரசியலாளர்கள் நாடிச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ள இந்தப் பத்திரிகை தமிழர்களின் செயற்பாட்டை வியந்து விளக்கப்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணக் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவராக திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு மூலாதார சக்தியாக தமிழர் சமுதாயமே இருந்தது என்பதைக் குறிபிட்டு, மத்திய கண்சவேட்டிவ் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் மக்சிம் பேணியரை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டள்ளது.
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் தலைவர்களில் ஒருவராகவும், ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் மூத்த ஆலோசகர் என்ற பொறுப்பை ஏற்று நடத்தி வருபவருமான திரு. பாபு நாகலிங்கத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில்,
நாங்கள் எங்களுடைய சமுதாயத்துடன் அரசியல் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் மத்திய கட்சியின் தலைமைக்குப் போட்டியிடும் மக்சிம் பேணியரை ஆதரிக்கின்றோம் என்று தெரிவித்தள்ளார்.
திரு.மக்சிம் பேர்ணியர் தமிழர்களிற்குப் புதியவரல்ல, அவருக்கான ஆதரவை திரு.பற்றிக் பிறவுனிற்காகப் பெற்றது போலப் பெறுவோம் எனத் தெரிவித்த பாபு நாகலிங்கம், தமிழர்களும் சீக்கியர்களும் இணைந்து அங்கத்துவர்களைச் சேர்ப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். இந்த நிலை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்சிம் பேணியர் குறித்து மின்னஞ்சலம் மூலம் கருத்துத் தெரிவித்த சிறி வல்லிபுரநாதர் இப்போது ஒன்றாரியோ மாகாணத்தைக் கடந்து தேசிய ரீதியாக அனைத்து மாகாணங்களிலும் செயற்படுமளவிற்கு தமிழர்கள் வளாச்சியடைந்துள்ளனர் என்பதைத் தெரிவித்தார்.
ஒன்றாரியோவில் மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் தமிழர்கள் இருப்பதையும், தமிழர்களில் சுமார் 12 ஆயிரம் பேரை அங்கத்துவர்களாக்குவதில் திரு. பாபு நாகலிங்கமும் அவரோடிணைந்த தொண்டர்களும் பங்காற்றியதை இந்தப் பத்திரிகை விசேடமாகக் குறிப்பிட்டுள்ளது. தொண்டார்வ ரீதியில் தமிழ்ச் சமூகத்தை வழிநடத்துவதாலேயே இவர்களிற்கான ஆதரவு தொடர்ந்தும் மக்களிடம் இருக்கின்றது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ரொறன்ரோ ஒலிபரப்புத்துறையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கியூபெக் மாகணத்தில் இருந்தே பிரதமர்கள் தெரிவாவது வழக்கம். கனடாவை வெல்ல கியூபெக்கின் ஆதரவு தேவை. எனவே கியூபெக்கைச் சேர்ந்த மக்சம் பேர்ணியரை மக்கள் ஆதரிப்பார்கள் என்பதில் கருத்து வேறுபாடில்லை என்றார்.
இதேவேளை ஒன்றாரியோ மாகாண பழைமைவாதக் கட்சியில் போட்டியிடுவதற்கான சமூக அந்தஸ்துள்ள கல்விப் பின்புலமுள்ள தமிழ்ப் பெண் வேட்பாளரொருவரைத் திறந்த மனதோடு, வெளிப்படைத் தன்மையோடு தேடும் படலம் தொடர்வதாக தான் கேள்வியுற்றதாகவும், இது வரவேற்கப்படக்கூடிய விடயமென்றும் மேற்படி ஊடகவியலாளர் தெரிவித்தார்.
இன்றைய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, முன்னைநாள் பிரதமர்களாக போல் மாட்டின் ஜீன் கிரச்சன், பியர் ரூடோ, பிரைன் மல்ரோணி உள்ளிட்ட பலரும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
- See more at: http://www.canadamirror.com/canada/81976.html#sthash.o2dFO0mc.dpuf
Geen opmerkingen:
Een reactie posten