தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 maart 2017

Spouse Visa-க்கு விண்ணப்பித்துள்ளீர்களா? பிரித்தானியா உள்விவகாரத் திணைக்களத்தின் அதிரடி முடிவு

அண்மையில் நடந்த உச்சநீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து உள்விவகாரத் திணைக்களம் சில விண்ணப்பங்களுக்கு முடிவெடுப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறியப்படுகின்றது.
குறிப்பாக, EEA அல்லாத கணவன் மனைவி பிள்ளைகளை ஸ்பொன்சர் செய்யும் விண்ணப்பங்கள் தொடர்பில் (Spouse Visa), முடிவெடுப்பதை உள்விவகாரத் திணைக்களம் தற்பொழுது நிறுத்திவைத்துள்ளது.
ஸ்பொன்சர் செய்பவர்களுடைய வருமானம் தொடர்பாக அண்மையில் நடந்த வழக்கின் தீர்ப்பினுடைய விளைவுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளும் நோக்கில் இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வழக்கில் (R (on the application of MM (Lebanon)) (Appellant) v SSHD) இவ்வாறு ஸ்பொன்சர் செய்பவர்கள் குறைந்தளவு வருமானமாக 18600 பவுண்களை பெற்றிருக்க வேண்டும் எனும் விதிமுறை சட்டபூர்வமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இருப்பினும், உச்சநீதிமன்றம் பல கரிசனைகளை எழுப்பியிருந்தது. அதில் குறிப்பாக, தற்பொழுது நடைமுறையில் உள்ள குடிவரவு விதிகள் மற்றும் உள்விவகாரத் திணைக்களத்தில் முடிவெடுப்பவர்களுடைய வழிகாட்டல்கள் (Guidance) பிள்ளைகள் விடயத்தில் மிகவும் இறுக்கமாகவே இருக்கின்றது.
அத்துடன் அவைகள் பிள்ளைகளுடைய நலன்களை(Best interests of the Children) முன்நிலைப்படுத்த தவறுகின்றன. ஆகவே உள்விவகாரத் திணைக்களத்தினுடைய வழிகாட்டல்கள் குறைபாடுகளை கொண்டுள்ளன என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்து. அத்துடன்அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் உள்விவகாரப் பேச்சாளர் ITVக்கு கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
"The current rules remain in force but we are carefully considering what the court has said in relation to exceptional cases where the income threshold has not been met, particularly where the case involves a child."
அத்துடன், விண்ணப்பங்களைத் தீர்மானிப்பவர்கள் மாற்று வழி வருமானங்களைக் கருத்திற் கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். சட்டங்களை மிகவும் இறுக்கமாகப் பிரயோகிப்பதால், நாட்டிற்குள் வந்து உடனடியாக வேலை செய்யக்கூடியவர்கள் அத்துடன் அரசாங்கத்தில் தங்கி பண உதவிகளைப் பெறாத விண்ணப்பதாரிகளுடைய விண்ணப்பங்களை புறந்தள்ளி வைக்கின்றது.
ஆகவே தற்பொழுதுள்ள Policy Guidance இவ்வாறான விடயங்களில் நெகிழ்வுத் தன்மையைக் காட்டும் வகையில் மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற பரிந்துரைகளைக் கருத்தில் எடுக்கும் நோக்கிலேயே அல்லது தீர்ப்பினுடைய தாக்கங்களை கருத்தில் கொள்வதற்காக இந்த விண்ணப்பங்களுக்கு முடிவெடுக்காமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று நம்பப்படுகின்றது.
அத்துடன் இதுதொடர்பான Appendix FM விதிமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று நம்பப்படுகின்றது.
மேலதிக தகவல்களைப் பெறவிரும்பினால் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். 10 நிமிட இலவச ஆலோசனை வழங்கப்படும்.
Jay Visva Solicitors
First Floor
784 Uxbridge Road
UB4 0RS, Hayes
UK
Tel: 0208 573 6673

Geen opmerkingen:

Een reactie posten