தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 maart 2017

கனடாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

கனடாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு விரைவில் குடியுரிமையை பெறுவது மிக அவசியம் என அந்நாட்டு குடியமர்வு விவகார வழக்கறிஞர் வலிறுத்தியுள்ளார்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தையுடன் 58 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறியுள்ளார்.
பிரித்தானியா கொலம்பியாவில் உள்ள Courtenay நகரில் தாயாருக்கு நிரந்திரக் குடியிருப்பு அனுமதி கிடைத்த போதிலும் அவருடைய மகன் வளரும்போது அவருக்கான கனடா குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யவில்லை.
ஆண்டுகள் பல கடந்து சென்றன. Len Van Heest எனப் பெயரிடப்பட்ட அந்தச் சிறுவன் பெரியவனாக வளர்ந்த நிலையில் சிறு சிறுக் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது நபருக்கு 59 வயது ஆன நிலையில், அவரை எதிர்வரும் 6-ம் திகதி நெதர்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து குடியமர்வு விவகார வழக்கறிஞரான Chantal Desloges என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, ‘கடந்த கொன்சர்வேட்டிவ் அரசு Bill C-43 என்ற சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா விதிப்படி சிறையில் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அடைக்கப்பட்ட ஒரு வெளிநாட்டினர், அதாவது குடியுரிமை பெறாத வெளிநாட்டினரை எந்த நேரத்திலும் நாடு கடத்த கனடா அரசிற்கு உரிமை உள்ளது.
தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.
ஒருவேளை, இவர் சிறையில் இல்லாமல் இருந்திருந்தால், நீண்ட ஆண்டுகள் கனடாவில் வசித்ததை காரணம் காட்டி அவரை கனடாவில் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், அவர் சிறைக்கு சென்றுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்க முடியாது. இது தொடர்பாக மேல் முறையீடுக் கூட செய்ய முடியாது.
கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று மிக நீண்ட ஆண்டுகள் வசித்து வந்தாலும், அவர்கள் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம்.
இதனை தவிர்க்க வெளிநாட்டினர்கள் உடனடியாக கனடா குடியுரிமையை பெறுவது ஒன்று தான் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும்.
கனடாவில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் ஒரு வெளிநாட்டினர் வசித்திருந்தால் அவர் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஏனெனில், குடியுரிமை பெறாமல் நிரந்தர குடியிருப்பு அனுமதியுடன் வசித்து வந்தால், தற்போது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு நேர்ந்துள்ள சம்பவம் நிகழ அதிக வாய்ப்புள்ளது என வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten