அறிக்கைக்காக பயன்படுத்தப்படும் இந்த வெற்றுத்தாளில் எதுவும் எழுதப்படாத நிலையில் சில சமூக ஆர்வலர்களின் மின்னஞ்சல் ஊடாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த வெற்றுத்தாள் யார், எதற்காக அனுப்பியுள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மௌனித்த பின்னர் உத்தியோக பூர்வமாக கையெழுத்துடன் கூடிய அறிக்கை எதுவும் வெளிவராத நிலையில் இந்த வெற்று அறிக்கை தாள் வெளியாகியுள்ளது சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
இதேவேளை, விடுதலைப் புலிகள் மௌனத்தின் பின்னர் பல்வேறுபட்ட அறிக்கைகள் வெளியாகி உள்ளதோடு, விடுதலைப் புலிகளின் இயக்கம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான வெற்று அறிக்கைத் தாள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten