இவ்வாறான சம்பவம் தம்புள்ளை வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக வரும் தாய்மாருக்கு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை வரும் தாய்மார் குழந்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்களின் உடலில் ஒருவகை கருவி பொருத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு வைத்தியசாலைகளிலும் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவிக்கு குடும்ப கட்டுபாடு மேற்கொள்ளுமாறு கொழும்பு வைத்தியயசாலையில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக சமூக வலையமைப்பு செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இவ்வாறான அழுத்தம் பிரயோகிக்கப்படுதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒழுங்கான விழிப்புணர்வற்ற தாய்மார்கள் இவ்வாறான நடவடிக்கைக்கு இணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இவ்வாறு குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிப்பது வைத்தியர்கள் அல்ல எனவும், குறித்த வைத்தியசாலையின் அதிகாரிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசசார்பற்ற அமைப்பு ஒன்றின் தலையீட்டில் நாடு முழுவதும் இவ்வாறு குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான மோசடியில் ஈடுபடும் மாப்பியா குழுக்களுக்கான நிதி பிரித்தானியாவிலிருந்து கிடைப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/community/01/138400?ref=rightsidebar
http://www.tamilwin.com/community/01/138400?ref=rightsidebar
Geen opmerkingen:
Een reactie posten