தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 maart 2017

ஐ.நா அறையில் ஈழத்தமிழர்களை அவசரமாக சந்தித்த அன்புமணி ராமதாஸ்



பா.ம.க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஈழத்தமிழர்கள் குறித்து, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுடன் ஐ.நா அறையில் அவசர சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்த மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை நேற்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

லவ்சான் மாநில உறுப்பினர் நமசிவாயம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சுவிஸ் இளையோர் அமைப்பினர் எனப் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான வ.கௌத்தமன் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten