தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 maart 2017

ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் ஆபத்து! வெளிப்படையாக உண்மையை கூறிய மைத்திரி, ரணில்!

சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் அரச தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கால அவகாசம் வழங்குவது அர்த்தமற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படையாக விசாரணைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில் எதுவும் நடக்கப்போவதில்லை.
எனவே இது ஈழத்தமிழ் மக்களுக்கு ஆபத்தான கட்டம் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த கால அவகாசத்தை வழங்காவிட்டால் அடுத்தது என்னவென்ற கேள்வியையும், ஒரு தரப்பினர் எழுப்பியுள்ளதாக இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் ஸ்ரீகயன் பாரதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர், லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten