இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராபர்ட் சிலோவா என்பவர் புகலிடம் கோரி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 11-ம் திகதி இவரது வீட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்பில் திடீரென தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
வீடு தீப்பற்றி எரிவதையும் அதில் சிலர் உயிருக்காக போராடுவதையும் கண்ட ராபர்ட் உடனடியாக காப்பாற்ற சென்றுள்ளார்.
வீட்டிற்கு 10 மற்றும் 17 வயதான சிறுமிகள் ‘காப்பாற்றுங்கள்......காப்பாற்றுங்கள்’ என அலறியவாறு பால்கனிக்கு வந்துள்ளனர்.
கீழே நின்றுருந்த ராபர்ட் இருவரையும் உடனடியாக கீழே குதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பின்னர், ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்தபோது இருவரையும் தாங்கி பிடித்து அவர்களின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
எனினும், வீட்டிற்குள் தீவிபத்தில் சிக்கிய இருவர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு குடியமர்வு அதிகாரிகளிடம் இருந்து ராபர்ட்டிற்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
அதில், பிரித்தானியா நாட்டில் தங்கியிருப்பதற்கான காலம் முடிந்துவிட்டதால் எதிர்வரும் மார்ச் 11-ம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இல்லையெனில், நாடு கடத்தப்படுவீர்கள்’ என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நிகழ்ந்த தீவிபத்து குறித்து ராபர்ட் விளக்கியபோது, இவை அனைத்தும் பிரித்தானிய சட்டங்களில் இடம்பெறாது. குடியமர்வு துறை விதித்துள்ள விதிகளை மட்டுமே நாங்கள் பின்பற்ற முடியும் என அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
மார்ச் 11-ம் திகதி நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதால் உள்ளூர் மக்கள் மத்தியில் ராபர்ட்டிற்கு ஆதரவாக கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten