கேப்பாப்பலவு மக்களின் காணி வெற்றி தொடர்பில் லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இது மக்களின் போராட்டம், தமது உரிமைகளுக்காக மக்கள் தொடர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தார்கள். அதன்படி வெற்றி கண்டார்கள். இதில் யாருக்கும் உரிமையில்லை.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு போர்க்குற்றம் இழைக்கப்பட்டுள்ளது, இனப்படுகொலை நடைபெற்றுள்ளது.
இவ்வாறிருக்க தற்போதைய நல்லாட்சி ஏன் இதற்கு ஆதரவளிக்கின்றது என கேள்வி எழுப்பினார்.
இது உண்மையான நல்லாட்சியாக இருந்தால் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றத்திலிருந்து யாரையும் பாதுகாக்கக் கூடாது.
இதை விடுத்துவிட்டு ஏதோ இலங்கையை பாதுகாப்பதைப் போன்று செயற்படுகின்றது. உண்மையில் இலங்கைக்கும் போர்க்குற்றத்திற்கும் எவ்வித தொடர்பு மில்லை. கடந்த அரசாங்காம் இழைத்த தவறுக்கு இன்றைய அரசு ஆதரவு வழங்குகின்றது.
தமிழர்களை பாதுகாப்போம் என கூறும் நல்லாட்சி அரசு தொடர்ந்தும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். என மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten