தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து இலங்கை சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றை சந்தித்தேயாக வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
பொது மக்களை கருத்திற் கொண்டு குற்றங்கள் தொடர்பில் முழுமையான சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
2008-2009 படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டபோதும், விசாரணை போதாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கப் படைகள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு மட்டுமல்லாது இன்றும் இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சலில் ஷெட்டி கூறியுள்ளார்.
இலங்கை இறுதிக் கட்ட யுத்த முடிவில் அதிகளவு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten