தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 december 2012

சர்வதேச விசாரணையை இலங்கை எதிர் கொள்ளவேண்டியுள்ளது :சலில் !!


இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் செயலர் சலில் செற்றி தெரிவித்துள்ளார்.

'குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக முழுமையான சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2008 ஆம் மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற படுகொலைகளை விசாரிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகள் போதுமானவையல்ல.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இருதரப்பையும் உள்ளடக்கியதாக விசாரணைகள் இடம்பெறவேண்டும்.

விடுதலைப் புலிகளும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பலரைக் கொன்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தனியே 2009ஆம் ஆண்டு விவகாரம் மட்டுமல்ல.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இப்போதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனிதஉரிமை மீறல்கள் ஒட்டுமொத்தமாக இடம்பெற்றுள்ளன.

இலங்கை நிலைமை தொடர்பாக, இந்தியா பெரும்பாலும் வாயைமூடிக் கொண்டு அமைதியாகவே இருந்தது. இந்நிலையில் இந்தியாவை புதிதாக கவனிப்பதற்கான நேரம் வந்து விட்டது' என்றார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4218

Geen opmerkingen:

Een reactie posten