பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழக்கூடாது என்பதற்காக தமிழ் மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற தோரணையில் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் புகைப்படங்களுடன் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 27ம் திகதிக்கு பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து பல்கலைக்கழகத்தில் புலிகள் ஆதரவு சக்தியை ஏற்படுத்துவதாக அந்த பிரசுரம் சுட்டுகிறது.
இந்நிலையில் குறித்த பிரசுரம், திட்டமிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை நியாயப்படுத்தவதற்கும், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழுந்துவிடக் கூடாதென்ற இனவாத நோக்கிலுமே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் ஜே.வி.பி அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்த மாற்றுக்குழு (மக்கள் போராட்ட இயக்கம்) உறுப்பினர்களும், தெற்கில் வெளிவாரியாக அரசாங்கத்திற்கெதிரான புலிகளின் நிலைப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4235
Geen opmerkingen:
Een reactie posten