தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 december 2012

பொதுநலவாய மகாநாடு 2013! கனடிய அரசிற்கு சமர்ப்பிப்பதற்கு கருத்துக் கணிப்பு! நீங்களும் வாக்களிக்கலாம்!

பொதுநலவாய மகாநாடு – 2013 கனடிய அரசின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதற்கான கருத்துக் கணிப்பு / Opinion poll on Canada’s participation in Commonwealth Summit – 2013


இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு நேரடியாக இலங்கையைக் கண்டிப்பதா அல்லது முற்றாகவே மாநாட்டிற்குச் செல்லாமல் விடுவதா என்ற கனடியப் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சுயாதீனமான ஒரு கருத்துக் கணிப்பை கனடா மிரர் இணையம் தமிழர் விவகாரத்தில் கனடாவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான செயலாற்றி வரும் அமைப்பான கனடிய மனிதவுரிமை மையத்துடன் [Canadian Human Rights Voice – CHRV ] இணைந்து நடத்துகிறது.
விஞ்ஞான, தரவு பூர்வமான கணிப்பிற்காக polldaddy.com என்ற இணையத்தின் துணையுடன் நடத்தப்படும் இக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கனடியப் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு கனடாவில் ஆளும்கட்சியுடன் ஆரோக்கியமான உறவைப் பேணும் கனடிய மனிதவுரிமை அமைப்பினால் [www.chrv.ca ] சமர்ப்பிக்கப்படும்.
ஈழத்தமிழினம் ஒரு இக்கட்டான இராணுவ அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் இன்றைய பொழுதில் எந்த முடிவு நன்மை பயக்கும் என்பதை தீர்மானிக்க இந்தக் கருத்துக் கணிப்பு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த கருத்துக் கணிப்பை பாரபட்சமற்றமுறையில் நடத்துகின்றது.
எனவே கீழே தரப்பட்டுள்ள மூன்று தெரிவுகளில் ஒன்றை அவற்றை வாசித்த பின்னர் அழுத்துங்கள். அது உங்கள் வாக்குகளாகப் பதியப்படும்.
இந்தக் கருத்துக் கணிப்பு டிசம்பர் மாதம் 14ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:59 வரை தொடரும் இவ் வாக்கெடுப்பில் அனைவரும் பங்குகொண்டு ஒரு தகுந்த முடிவினை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர் கனடிய மனிதவுரிமை மையத்தினர்.
நன்றி
கனடாமிரர்

Geen opmerkingen:

Een reactie posten