தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 december 2012

அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் வலுக்கிறது! பிரதம நீதியரசர் மீதான அடுத்த விசாரணை நாளை மறுநாள்!


CJ asked to appear before PSC on Thursday [ பி.பி.சி ]
இலங்கையில் அரசுக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்து வருகிறது.
பிரதம நீதியரசர்  சிராணி பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரச தரப்புக்கு ஆதரவாகவும், நீதித்துறையில் அரசின் தலையீட்டை எதிர்த்து பிரதம நீதியரசருக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றன.
தம் மீதான குற்றச்சாட்டை விசாரித்து வரும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன்னர் பிரதம நீதியரசர் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார்.
அடுத்த விசாரணை இம்மாதம் நாளை மறுநாள் வியாழக்கிழமை  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று கூறி, அவர் மீது அரச தரப்பு 14 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும், நிதி முறைகேடுகள் எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் தனது வழக்கறிஞர்கள் மூலம் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவினர் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை சிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் தான் பதவி விலகப் போவதில்லை என்று பிரதம நீதியரசர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை சுயாதீனமான தீர்ப்புகளை வழங்கி வருவதற்காக அரச தரப்பால் இலக்கு வைக்கப்படுகிறது என்று, பிரதம நீதியரசரின் ஆதரவாளரும், அரசியல் சாசன வழக்கறிஞருமான ஜெ சி வெலியாமுன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் அனைத்து அமைப்புகளிலும், இதுவரை நீதித்துறை மட்டுமே சுயாதீனமான அமைப்பாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டும் அவர், அதன் காரணமாகவே இவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் கூறுகிறார்.
எனினும் உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக, அரசுக்கு ஆதரவானவர்கள், பிரதம நீதியரசருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு நாட்டின் மன்னரைப் போல பலம் வாய்ந்தவர் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் இரு தூண்களாக இருக்கும் நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராக அரச ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்
தலைமை நீதிபதிக்கு ஆதரவளிக்கும் மாதுலவாவே சோபித தேரர்

http://news.lankasri.com/show-RUmqzCTYNUix1.html

CJ asked to appear before PSC on Thursday
[ Tuesday, 04 December 2012, 04:59.55 PM GMT +05:30 ]
Sri Lanka's chief justice appeared before a Parliamentary committee for a second time Tuesday to answer impeachment charges in a case that has drawn protests from both supporters and opponents.
Thousands of government-supporters took to the streets calling for Shirani Bandaranayake's resignation, while Buddhist monks, Catholic priests, opposition lawmakers, judges, lawyers and rights activists rallied in support of her.
The government has accused Bandaranayake of misusing power and having unexplained wealth. She denies any wrongdoing. Opposition parties and independent analysts say the impeachment attempt is aimed at stifling judiciary independence and concentrating power with President Mahinda Rajapaksa.
Sri Lanka's influential Buddhist monks, lawyers, trade unions and civil society activists want the government to withdraw the motion, saying it threatens the judiciary's independence. Speaking to BBC "We urge the government to withdraw this motion even at this stage," said J.C. Weliamuna, a lawyer and activist. He said the "government is hell-bent on getting rid of chief justice" for ruling against it several times.
Those in favour of the motion shouted slogans demanding Bandaranayake's resignation. "The chief justice should resign immediately if she is really concerned about the independence and integrity of the judiciary," said Ajantha Liyanage, one of the organisers of the protest and a local politician representing Rajapaksa's ruling coalition.
The impeachment motion was submitted a month ago calling for a Parliament Select Committee to investigate 14 charges and remove Bandaranayake. If the committee determines that the complaint has merit, an impeachment motion will be voted on and forwarded to Rajapaksa for further action. With his ruling coalition controlling more than two-thirds of Parliament's seats, such a motion is expected to be carried easily.
The United Nations, the United States and rights groups have expressed concerns about the motion, which follows months of conflict between Parliament and the judiciary. Bandaranayake came under strong government criticism after she ruled that legislation giving more power to Minister of Economic Development Basil Rajapaksa, a brother of the president, violated the constitution.
Chief Justice Shirani Bandaranayake, who appeared before the Parliamentary Select Committee (PSC) today was asked to appear before the PSC next Thursday at 3.00 p.m., official sources said.
1st Photo - Group of rulling party supporters stage protest against the Chief Justice

2nd Photo - Ven.Madhuluwaway Sobitha thero supports CJ

Geen opmerkingen:

Een reactie posten