ஜோன் கெரி அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். முன்னதாக, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவராக உள்ள சூசான் ரைஸ் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பெங்காசியில் அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சர்ச்சையை அடுத்து, ஜோன் கெரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்ரனின் பதவிக். காலத்தில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இறுக்கமான போக்கை கடைப்பிடித்து வந்தது.
இந்தநிலையில், புதிய இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஜோன் கெரியின் அணுகுமுறை எத்தகையதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten