குறித்த இளைஞர், யுவதிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்க விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக இராணுவ தளபதியை மேற்கொள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய – இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கூட்டாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம் என தெரிவித்துள்ளது.
இதற்காக பயன்படுத்தப்படவிருந்த முகாம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்பட்டு, சிறிலங்காவுக்கு அனுப்ப முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம்.
இதனை தமது பலம் வாய்ந்த புலனாய்வுத்துறையினர் தடுத்துள்ளதாக கோத்தாபயவுக்கு தகவல் அனுப்பியுள்ளார் மஹிந்த ஹத்துருசிங்க.
ஒருசில மாதங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரினை இலக்கு வைத்து சிறிலங்காவின் பல சதி முயற்சிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
ஐ.நாவில் சந்திக்கவுள்ள ஆபத்தான கட்டத்தை கடக்க, சிறிலங்காவில் மீன்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்கியுள்ளார்கள். இதனால் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது, கைதுகளை நிறுத்த முடியாது என்ற வாதத்தினை பலப்படுத்தவே இவ்வாறான புனைக் கதைகள் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten