யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த பெண்ணொரவர் நேற்று புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுன்னாகம் மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் சிவாகினி (வயது 40) என்ற பெண்ணே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இக்கைதுகள் தொடர்பான முறைப்பாடுகள் அனைத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டவர்கள் என்ன குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுகின்றார்கள், அவர்கள் மீது என் னசடட நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten