யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படும் என மாணவ்ர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது.
எனவே விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை என அவர்களை சந்திக்கப் போகும் போது எடுத்துக் கூறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழ கனவு கலைக்கப்படும் வரை அவர்கள் விடுதலை செய்யப்படப் போவதில்லை என கூறியுள்ள யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க, கைதுசெய்யப்பட்ட மாணவர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிகேடியர் தரத்திலானவர்கள் எனவும் கூறியிருக்கின்றார்.
பல்கலைக்கழக மாணவர்களினது விடுதலையினை வலியுறுத்தி இன்று காலை 10மணிக்கு பலாலியில் நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்தச் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இப்போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வருவார் எனவும் அவர்களின் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் இவர்கள் கனவு காண்கிறார்கள். அந்த கனவு கலைக்கப்படும் வரையில் அவர்கள் விடுதலை செய்யப்படப் போவதில்லை.
நாம் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்தபோது பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து சுமார் 50ற்கும் மேற்பட்ட பிரபாகரனின் புகைப்படங்களை மீட்டிருக்கின்றோம். இதன் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை தற்போதும் முன்னெடுக்கிறார்கள் என்பது நிருபிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள நெடியவன், விநாயகம் போன்ற பயங்கரவாதிகளுடன் இவர்களுக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதை நாம் உறுதி செய்திருக்கின்றோம்.
இதிலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்த்தின் செயலாளரான தர்சானந்த் மற்றும் சொலமன் ஆகியோர் புலிகள் அமைப்பின் பிரிகேடியர் தரத்திலானவர்கள்.
ஜே.வி.பியின் போராட்டத்திற்கும், புலிகளின் போராட்டத்திற்கும் நிறையவே வித்தியாசமுள்ளது. புலிகள் தனிநாடு கோரி போராடினார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். உலகமே புலிகளை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தியிருக்கின்றது.
எனவே நாம் இதற்கு அனுமதிக்க மாட்டோம். என கூறியதுடன், விரிவுரையாளர்களும், பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் பேச முற்பட்டபோது அவர்களை வாயை மூடுங்கள் என அடக்கியுள்ளார்.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கண்ணீர் விட்டழுது தங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள் என கேட்டபோது கிட்லர் பாணியில் சிரித்தபடியே எழுந்து சென்றுவிட்டார்
இதேவேளை வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவம் இருப்பதாக சிலர் கூறுகின்றார்கள். ஆனால் 15ஆயிரம் இராணுவமே இருப்பதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmqzCRVNVls2.html
Geen opmerkingen:
Een reactie posten