பிணையிலிருந்த சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவை கனடிய காவல்துறையினர் நேற்றைய தினம் சரணடையுமாறு கேட்டத்திற்கிணங்க சரணடைந்த அவருக்கு இன்று பயங்கரவாதம் குறித்த கனடிய சட்டம் சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, அந்த சட்டத்தை எதிர்த்து முறையீடு செய்த இவர்களின் மனுக்களை நிராகரித்துள்ளது.
சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா விடுதலைப் புலிகளுக்கு பணம் மாற்றிக் கொடுத்தார் என்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் மென்பொருட்களையும் வாங்க முயற்சித்தார் என்று அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் பிரதீபன் நடராஜாவும் மீது விடுதலைப்புலிகளுக்கு ஒரு மில்லியன் டாலர் மதிப்பில் ஏவுகணைகளும் ஏகே 47 ரக துப்பாக்கிகளும் வாங்கிக் கொடுக்க முயற்சித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
தங்களை பயங்கரவாத சட்டப் பிரிவின்படி கைது செய்தது தவறு என்றும் கனடிய பயங்கரவாத சட்டம் பயங்கரவாதம் என்பதற்கு சரியான வரையறை இல்லை என்றும் அது கருத்துச் சுதந்திரத்தை பாதிப்பது போல் இருக்கிறது என்றும் அவர்கள் மேல் முறையீடு செய்திருந்தார்கள்.
ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில், தேவைக்கு அதிகமான பரப்பில் இயங்கவில்லை என்றும் அதன் தாக்கம் சமமான அளவில்தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்தச் சட்டத்தின் நோக்கம் எந்த விதத்திலும் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கவில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் பிரதீபன் நடராஜாவும் இருவரும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்தும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தாங்கள் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்பதை நிருபிக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கள் கடைசி மேல் முறையீட்டில் தோற்றுவிட்டதனால் பிரதீபன் நடராஜாவும்வும் சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது அமெரிக்காவில் இருக்கும் குற்றத்துக்காக நியுயோர்க் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படலாம். இதற்காக இவ்விருவரும் விரைவில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களுடன் அல்குவைதா தீவிரவாத இயக்கத்தின் பின்லேடனை போற்றுபவர், இங்கிலாந்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக மொமின் காவ்ஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கும் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ள கனடிய உச்ச நீதிமன்றம் காஜ்வாவின் ஆயுள்கால தண்டனையில் எந்த மாற்றமுமில்லை.
மேலும் தான் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு ஆஃப்கானிஸ்தானுக்கு ஆதரவான ஆயுதப் போரில் ஈடுபட்டதாக மொமின் காவ்ஜா சொன்ன விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten