சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா இழைத்த தவறுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட சாள்ஸ் பெட்றியின் அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான குழு உடனடியாகச் செயற்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்த அறிக்கையை மீளாய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு நிபுணர் குழுவொன்றை உடனடியாக நியமிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
எனினும், சாள்ஸ் பெட்றி அறிக்கை சமர்ப்பித்து மூன்று வாரங்கள் கழித்தே, மீளாய்வுக்கான நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கும்படி, ஐ.நாவின் பிரதிச் செயலாளர் நாயகம் ஜான் எலியாசன் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஐ.நா நேற்று மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளது.
நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கும் ஜான் எலியாசன், மீளாய்வில் பங்கேற்பதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும்படி, ஐ.நா திணைக்களங்கள், நிதியங்கள், திட்டங்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே இந்த மீளாய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மீளாய்வில், ஐ.நாவின் நிதியங்கள், திட்டங்களே பங்கேற்கும் என்றும், அனைத்துலக நாணய நிதியம் போன்ற முகவர் அமைப்புகள் இடம்பெறமாட்டாது என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் தவறுகள் தொடர்பாக உடனடியாக மீளாய்வு செய்யப்படும் என்று பான் கீ மூன் உறுதியளித்த போதும், அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலேயே அது முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten