சமீபத்தில் இன்ரர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள சில தகவல்களின் அடிப்படையில், 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மற்றும் ஏப்பிரல் மாதம் என 2 மாதங்களிலும் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு பல அழுத்தங்கள் சென்றுள்ளது. அதாவது இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. இருப்பினும் அப்போது ஐ.நாவின் பாதுகாபு கவுன்சிலின் தலைவராக இருந்த ஜப்பானியரான யூக்கியோ தாக்காசு, இலங்கை அரசுக்கு சார்பாக நடந்துகொண்டுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எந்த விவகாரம் விவாதத்திற்கு வரவேண்டும் என்பதனை தீர்மாணிக்கும் இவர், இலங்கை தொடர்பான விவாதங்களை வேண்டும் என்றே தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தவறான அபிப்பிராயங்களை இவர் கொண்டிருந்தாகவும், இவர் ஒரு இலங்கை அரசின் அபிமானி என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக நாம் இங்கே இணைத்துள்ள வீடியோவைப் பார்க்கலாம். இதில் 00.35 வது செக்கனில் இருந்து இவர் இலங்கை தொடர்பாக பேச ஆரம்பிக்கிறார். To watch the UN video
குறிப்பாக லிபியாவில் நடந்த புரட்சியை எடுத்துக்கொள்வோம். அங்கே பென்காசி நகரில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் கிடுகிடுவென தலைநகர் திரிபோலிவரை செல்ல என்ன காரணம் ? கேணல் கடாஃபியின் படை எவ்வாறு அவ்வளவு எளிதில் தோற்கடிக்கப்படாது ? அனைத்துமே ஐ.-நா பாதுகாப்பு கவுன்சில் கொடுத்த அதிகாரம் தான். இதேபோல ஐ. நா பாதுகாப்பு கவுன்சில் இலங்கை விடையத்திலும் நடந்து கொண்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் ?
உடனே நோ - பயர் சூன் : அதாவது சூனியப் பிரதேசமாக முள்ளிவாய்க்காலை அறிவித்திருப்பார்கள். இலங்கை விமானங்கள் அங்கே பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கும். உடனடியாக ஐ.நா பாதுகாப்பு படை முள்ளிவாய்க்காலில் தரையிறங்கியிருக்கும். புலிகளும் சுட முடியாது அதே வேளை இராணுவமும் சுட முடியாத நிலை தோன்றியிருக்கும். இராணுவம் மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாத நிலை தோன்றியிருக்கும். அதுமட்டுமா 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்( எம் உறவுகள்) கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். ஒரு நல்ல ஒப்பந்தம் வரும்வரை ஐ.நாவின் இராணும் இன்றுவரை அங்கே நிலைகொண்டிருக்கும். இவை அனைத்துமே நடக்காமல் போக, ஜப்பான் உறுதுணையாக நின்றுள்ளது. சண்டை நடக்கும்போது குழுக்கள் பிரிவதுபோல, ரொபேட் ஓ பிளேக் ,ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி, பாதுகாப்பு கவுன்சில் தலைவர் யூக்கியோ தாக்காசு, போன்றவர்கள் எல்லாம் ஒரு அணியில் நின்று செயல்பட்டுள்ளார்கள். மனிதப் படுகொலை நடந்தாலும் பரவாயில்லை புலிகள் இருக்கக்கூடாது என்பதே இவர்கள் எடுத்த முடிவாக இருந்திருக்கிறது.
தற்போது கசிந்துள்ள ஐ.நாவின் அறிக்கை ! வெளியாகிக்கொண்டு இருக்கும் ஆதாரங்கள் ! சனல் 4 வெளியிட்ட கொலைக்களங்கள் என்பன தற்போது பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. 2009ம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு தலைவராக இருந்த யூக்கியோ தாக்காசுவே இக் கொலைகள் நடைபெற்றதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ! ஐ.நா நினைத்திருந்தால் இப் பேரழிவைத் தடுத்திருக்கலாம். இதனைச் செய்ய மறுத்து பல்லாயிரக் கணக்கான மக்களை பலிகடவாக்கியது இந்த யூக்கியோ தாக்காசு தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten