தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 december 2012

தன் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு வழங்க கனடா முடிவு!?


தனது நாட்டுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு அளிக்க கனடா முடிவு செய்துள்ளது.
தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் கனடாவின் புலம்பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னியும், அமெரிக்க தூதர் டேவிட் ஜேக்கப்சனும் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை போன்ற தகவலை அளிக்க வேண்டும். இதன் மூலம் குறித்த நபர் எங்கிருந்து வந்துள்ளார், அவரின் நடவடிக்கைகள் மற்றும் கனடா வந்திருப்பதன் காரணம் போன்றவற்றை அமெரிக்கா அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இத்தகவல் இரகசியமாக வைக்கப்படும் என்றும், எகிப்து, ஈரான், ஈராக் உட்பட 29 நாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் பொறுந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தம் தனி நபர் உரிமையை பாதிக்கும் என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten