தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 december 2012

மகிந்தருடன் படம் எடுத்ததுபோல போட்டோ ஷாப் பீலா காட்டும் ராமச்சந்திரன் !


வெள்ளையனும் ஒல்லாந்தனும் போர்த்துக்கீசனும் பணம் கொடுத்து கிறிஸ்தவத்தை புகுத்தினார்கள்,இன்று பரம்பரைக்கிறிஸ்தவர் போல இவர்கள் ஆடுகிறார்கள்,முஸ்லீம்களும் அப்படியே!!புத்தம் சைவத்தில் இருந்து வந்ததுதானே,சிங்களமும் எழு மொழியில் இருந்து பிறந்ததே!!அந்நிய வருகையை ஆதரித்த தமிழன் தனது நாட்டின் மதம் மொழிகளை புறக்கணி என்பது பணமோகமோ!!?இனப்பற்றோ!!புத்தபிகுவான கிறிஸ்து தந்த மதத்தை கடைப்பிடித்து பெருமைகொண்டாடும் தமிழா,கிறிஸ்தவத்தால் உருவான இஸ்லாமே உன் மதமாக பெருமை கொள்ளும் தமிழா உன் உண்மை உருவம்தான் என்ன!?

இந்து -பெளத்த கலாச்சார பேரவை என்று ஒரு அமைப்பை மீண்டும் தூசிதட்டி அமைக்க இலங்கை அரசு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1980 துகளில் இவ்வாறு ஒரு அமைப்பை நிறுவி, தமிழ் பெளத்தர்களை உருவாக்க இலங்கை அரசு திட்டமிட்டது. அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அதனை பரந்துபட்ட அளவில் செய்ய தற்போது இலங்கை அரசால் களமிறக்கப்பட்டுள நபர் தான் எஸ்.எல்.ராமச்சந்திரன் ஆவர். இவர் தனது அலுவலகச் சுவரில், தானும் மகிந்தரும் இணைந்து படம்பிடித்துள்ளதுபோல ஒரு போட்டோ ஷாப் பீலாவும் காட்டி, படத்தை தொங்கவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் வன்னி போன்ற பிரதேசங்களில், சிங்கள மொழி போதிக்கப்படும் பாடசாலைகளைத் திறப்பது, பெளத்த இந்து கலாச்சார நிலையங்களைத் திறப்பது, இதனூடாக தமிழர்களுக்கு சிங்கள மொழி அறிவூட்டுவது, பின்னர் அவர்களை புத்தமத்தை தழுவச் சொல்லி, ஊக்குவிப்பது என்பதே இலங்கை அரசு தற்போது மேற்கொண்டுவரும் பாரிய திட்டமாக உள்ளது. இதற்கு இலங்கை அரசானது பல மில்லியன் ரூபாக்களை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற நிலையங்கள் சில சமீபத்தில் திறக்கப்பட்ட சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். யாழில் உள்ள வர்த்தகர் ரவிக்குமார் என்னும் நபர் மேற்படி, ராமச்சந்திரனுக்கு துணையாக இருந்து, இந் நிலையங்களைத் திறக்க உதவியாக இருக்கிறார். சிங்கள மொழியை சும்மா தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதும், நல்ல வேலைகள் கிடைக்கும். இல்லை என்றால் புத்த மதத்துக்கு மாறினாலும் நல்ல வேலைகள் கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று எல்லாம், இவர்கள் தமிழர்களிடம் கூறிவருகிறார்கள். யாழ் இராணுவத்தளபதியின் ஆசியுடன் இந்த மதமாற்ற மற்றும் மொழிமாற்ற வேலைகள் மிக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு புறத்தில் சம்பந்தர் ஐயா இராணுவத்தை விலக்கிக்கொள்ளத் தேவையில்லை என்று கூறிவரும் நிலையில், இதுவும் ஒருபுறம் வேகமாக நடைபெற்று வருகிறது.

போகிற போக்கில் பார்த்தால், வட கிழக்கில் இனி சிங்களம் பேசும் பூர்வீகத் தமிழர்கள் தான் மிஞ்சுவார்கள். நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இதனை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு சில தமிழர்கள் துணைபோவது தான் மிகவும் வேதனையான விடையமாக உள்ளது. யாழ் மற்றும் வன்னிப் பகுதியில் மட்டும் சுமார் 45 நிலையங்களை இவ்வாறு அமைக்க இலங்கை அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளது. இதற்கான நிலங்களை அரசாங்கம் அபகரித்து, இந்த இடங்களில் மதில் கட்டவும், நீர் வசதிகளைச் செய்யவும் டென்டர்களை விட்டுள்ளது. அதாவது குறைவாக யார் சொல்கிறார்களோ அவர்களுக்கே இந்த கட்டட வேலைகளை கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாம். இந்த 45 நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டால் தமிழர்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை என்று மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.










Geen opmerkingen:

Een reactie posten