சுவிஸ் நாட்டில் அகதிகோரிக்கை நிராகரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் கடந்த வியாழக்கிழமையன்று அதிகாலை அவர்களது வீட்டில் வைத்து பொலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் பலர் சுவிஸ் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளதாக மேலும் தெரியவருவதோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சுயமாகவே நாட்டிற்கு திரும்பும் விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளால் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்ற போதும் சுவிஸ் அரசாங்கத்தாலும் பல தமிழர்கள் கடந்த சில மாதங்களாக சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தற்போதும் பல நூறு தமிழர்கள் வதிவிட உரிமை மறுக்கப்பட்டு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten