தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக இருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் உள்ளதாக அரசு ஆதரவு சிங்கள நாளேடான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
திவயின‘ நாளேட்டின் பாதுகாப்புச் செய்தியாளரான கீர்த்தி வர்ணகுலசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை, போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
அதன் பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்ற விபரத்தை இலங்கை அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு சாட்சியமளித்திருந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகியின் மனைவி, தனது கணவர் மற்றும், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 50 பேரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘புதுவை இரத்தினதுரை எங்கே?‘ என்ற கேள்வியை எழுப்பும் இணையவழி மனு ஒன்றில் ஒப்பங்கள் திரட்டப்பட்டு வரும் நிலையிலேயே, ‘திவயின‘ நாளேடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
புதுவை இரத்தினதுரை எங்கே?‘ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியை எழுப்பும் இந்த இணையவழி மனுவின் பிரதிகள் அனைத்துலக மன்னிப்புச்சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுசானே நொசெல், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று மனுவுக்கு ஒப்பங்கள் திரட்டும் avaaz.org என்ற சமூக முறைப்பாட்டு இணையம் தெரிவித்துள்ளது.
புதுவை இரத்தினதுரை எங்கே?‘ இணைய மனுவில் நீங்களும் ஒப்பமிடலாம்-
http://www.avaaz.org/en/petition/Where_Is_Puthuvai_Ratnathurai/
http://www.avaaz.org/en/petition/Where_Is_Puthuvai_Ratnathurai/
Geen opmerkingen:
Een reactie posten