தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 maart 2012

போர்குற்றங்கள் பற்றி இந்தியாவை பேச வைத்த பெண் நிருபருக்கு விருது !!



இலங்கையின் போர்குற்றங்கள் பற்றி இந்தியாவை பேச வைத்த பெண் நிருபருக்கு விருது 
ஹெட் லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு பெண் நிருபர் ஒருவரை அனுப்பி அங்கு ஈழத்தில் நடக்கும் பேரவலத்தை ரகசியமாக படம் பிடித்தது. அந்த ஆவணப் படத்தின் பெயர் 'இலங்கையின் கொலைக் களத்தில் நான் இனப் படுகொலையை நேரில் பார்த்தேன்' என்பதாகும். இலங்கை அரசின் அனுமதி இன்றி எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தில் பல ஈழத் தமிழர்களை ரகசியமாக பேட்டி எடுத்த பெண் ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சியின் நிருபர் பிரியம்வதா பஞ்சாபிகேசன் ஆவார்.

இவருடையே துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும். காரணம், இலங்கை ராணுவத்திடம் சிக்காமல் ராணுவத்திற்கு தெரியாமல் போரினால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு அவரும் அவரோடு பயணித்த ஒரு ஒளிப்பதிவாளரும் சென்று இந்த ஆவணப் படத்தை எடுத்தார்கள்.

இந்த ஆவணப் படம் இந்திய அளவிலும் , உலக அளவிலும் பல தாக்கத்தை உண்டு பண்ணியது. குறிப்பாக இந்த ஆவணப் படம் பற்றி இந்திய பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது .தமிழ்நாட்டு சட்டசபையிலும் பேசப்பட்டு பின் அமெரிக்காவின் ஹில்லரி கிளிண்டன் சென்னை வந்த போது முதல் அமைச்சர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களின் துயரம் குறித்து பேச வைத்தது. மேலும் இலங்கையில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை. இது வரை 26 ஊடகவியலாளர்கள் கொல்லப்படுன்னர். 60 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இப்படியொரு துணிச்சலான ஆவணப் படத்தை எடுத்த பிரியம்வதாவிற்கு டெல்லியில் சிறந்த புலனாய்வு பெண் நிருபர் என்ற மதிப்பு மிக்க தேசிய விருதை செய்தி தொலைக்காட்சிக்கான விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது. இலங்கையின் கொலைக் களத்திற்கு சென்று நேரில் சாட்சிகளை பார்த்து உண்மையான போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களை பதிவு செய்த பிரியம்வதாவிற்கும், இந்தியாவில் முதன் முதலில் இனப்படுகொலை காணொளிகளை வெளியிட்ட ஹெட் லைன்ஸ் டுடே தொலைகாட்சிக்கு தமிழர்கள் அனைவரும் வாழ்த்துகள் சொல்ல கடமைபட்டுள்ளனர். வாசகர்களும் தங்கள் வாழ்த்துகளை சொல்லலாமே!

Geen opmerkingen:

Een reactie posten