அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இது பழமொழி. ஆனால் எவ்வளவு முயன்றாலும் தமிழர்களின் போராடும் வலுவை மழுங்கடிக்க முடியாது மகிந்த கும்பல் தவியாயத் தவித்து வருகின்றது.அதன் அடிப்படையில் பல்வேறு சதி முயற்சிகளை அரங்கேற்றிய மகிந்த கும்பல் எம்மவர்களையே அதற்குப் பயன்படுத்தவும் துணிந்தது. மகிந்த வீசும் எலும்புத் துண்டுகளிற்காக இனத்தை காட்டிக்கொடுக்க சிலர் துணைபோனாலும் உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை தகர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதனால்தான் புதிய புதிய வழிகளில் தமிழர்களின் ஒருங்கிணைவை தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றான் கொலைவெறியன் மகிந்த ராசபக்சே. பல்வேறு பிளவுகள் குழப்பங்கள் சதிகள் கழுத்தறுப்புகள் குத்துவெட்டுகள் என அரங்கேற்றப்பட்டு புலம்பெயர் தமிழர் தலைமையினை கேள்விக்குரியதாக்கி
தனது திட்டத்தை அரங்கேற்ற முயன்ற மகிந்தவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

முள்ளிவாய்காலில் அரங்கேற்றப்பட்ட மானுடத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த கும்பலை போர்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வாங்கும்வரை ஓயாது இந்தப்படை என புலம்பெயர் தேசங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தி சிங்கள ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் எம்மவர்களை மீண்டும் மூலையில் முடக்க போட்ட திட்டம் தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

அந்த சதித் திட்டம் தொடர்பாக நாம் அறிய முற்பட்டபோது நம்பகமான இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. சில தினங்களில் சனல் 4 ஒளிபரப்ப உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்கள் அடங்கிய ஆவணப்படத்தை வெளியிட உள்ள தகவல் எல்லோரும் அறிந்ததாகும்.

இதற்குள்தான் அந்த சதி முயற்சியின் கரு உறங்கிக் கிடப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களது நீதி தேடிய நெடிய பயணத்தில் எதிர்பாராது வந்திணைந்த பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியும் ஒன்றாகும்.

சிறிலங்காவின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படத்தின் மூலமாக சிங்களப்படைகள் ஈழமண்ணில் அரங்கேற்றிய போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்பட கானொளி ஆதாரங்களை வெளியிட்டு தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்ததுடன் சிங்களத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது சனல்4 தொலைக்காட்சி.

தற்போது அதனையே எமக்கெதிரான உளவியல் போரிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளார்கள் மகிந்தவின் கைக்கூலிகள். சிறிலங்கா அரசபடைகளின் போர்குற்ற ஆதாரங்களை சமர்பிப்பவர்கள் போன்று சனல்4 தொலைக்காட்சி வட்டாரத்திற்குள் ஊடுருவிய இந்த புல்லுருவிகள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் என சில புகைப்பட காணொளித் தரவுகளை தயார்செய்து வழங்கியுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் சனல்4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கிய ஆவணப்படத்தில் இந்த விடையங்களையும் சேர்த்து ஒளிபரப்ப உள்ளதே இந்த சதித்திட்டமாகும்.

இதன் மூலம் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராச்சியை விட்டுவிட்டு தமிழின விடுதலைக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக களமாடிவரும் எம்மவர்களது உளவுரனை சிதைத்து மூலையில் முடக்குவதே இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் மகிந்தவின் திட்டமாகும்.

இதற்கு சனல்4 எப்படி உடன்பட்டது என்ற சந்தேகம் எழுவதற்கு முன்னர் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் வெளியிடும் சனல்4 சொல்லும் இந்த விடையமும் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நிலைக்கு உலகத்தமிழர்களது இயல்பாகவே வந்துவிடுவார்கள்.

மீண்டும் 20-05-2009ற்கு தமிழர்களை அழைத்துச் செல்லவே சிங்களம் திட்டமிடுகின்றது. அதாவது உலகத் தமிழர்களது ஆன்மாவில் இடிபோல் வந்திறங்கிய அந்த செய்தி சிங்களத்தால் வெளியிட்ட நாள்தான் அந்நாளாகும். இதனை எப்படி மறக்க முடியும்.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை வெளியிட்டதன் பின்னர் சனல்4 தொலைகக்காட்சி மீது சிங்களத் தரப்பால் சுமத்தப்பட்ட புலிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டுதான் சிறிலங்கா அரசுக்கு எதிராக இதனை வெளியிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்கு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த சனல்4 தொலைக்காட்சியினர் நினைத்திருக்கலாம்.

தங்களை நடுநிலையான ஊடகம் எனக் காட்டிக் கொள்வதற்காக சனல்4 தொலைக்காட்சி மகிந்த கைக்கூலிகளால் வழங்கப்பட்டுள்ள இந்த புகைப்பட காணொளி தரவுகளையும் சேர்த்து ஒளிபரப்புவதற்கு முடிவெடுத்திருக்கலாம்.

சனல்4 தொலைக்காட்சியுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது இதில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். தாமும் இந்த புகைப்பட காணொளி ஆதாரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தி வெளியாவதை தடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக பேசுவதற்கு சனல்4 தொலைக்காட்சி நிர்வாகத்தில் தொடர்பில் இருந்தவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தொடர்பு கொள்வதற்கு கடுமையான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஈழதேசம் இணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.

சிலநாட்களில் ஒளிபரப்பாவதற்கு காத்திருக்கம் குறித்த ஆவணப்படத் தொகுப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டம் ஒளிபரப்புவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்ட இன்நொரு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

எது எப்படியோ…! தலைவர் தொடர்பாக காட்சிகள் போலியானவை என உறுதிப்படுத்தி ஒளிபரப்பில் இருந்து நீக்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது வெற்றியளித்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் திட்டமிட்டது போன்று ஒளிபரப்பாகும்.

எது எவ்வாறு அமைந்தாலும் நாம் எமக்கான இலட்சியப்பயணத்தில் உறுதியோடு பயனிப்போம். யாரும் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் மற்றவர்களையும் குழப்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று ஈழதேசம் இணையத்தளம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றது.

“ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்”