தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல் தலைவியாக கடமையாற்றிய தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக் கிடைக்காததால் இவரது விளக்கமறியல் கால எல்லை நீடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியம் சிவகாமி என அழைக்கப்படும் தமிழினி இன்று (26) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழினி தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் முழு ஆவணமும் சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.
எனினும் சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட மா அதிபர் இன்னும் ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தமிழினியை எதிர்வரும் ஏப்ரல் 9ம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten