பிரான்ஸ் துலூஸ் நகரில் அமைந்துள்ள யூதப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில், மூன்று மாணவர்கள் உட்பட
நான்கு பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது; மேற்குறித்த பாடசாலைக்குள் இன்று காலை நநுழைந்த துப்பாகிதாரி ஒருவர், அங்கிருந்த மாணவர்களை பாடசாலை வளாகத்தில் விரட்டியபடி துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டதாகவும், இதன்போது மூன்று மாணவர்களும், ஒரு ஆசிரியரும் பரிதாகரமாக உயிரிழந்ததாகவும், துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபர், அங்கிருந்து ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாகவும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்ற போது, 200க்கும் அதிகமான பிள்ளைகள் பாடசாலை வளாகத்துக்குள் இருந்ததாகவும், முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கும் தகவல்களின் படி, குறித்த துப்பாக்கிதாரி இந்தப் பகுதியில் மேற்கொண்ட மூன்றாவது சம்பவமாக இது உள்ளதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முன்பு நடந்துள்ள இரு சம்பவங்களிலும், படைத்துறைச் சிப்பாய்கள் மூவர் பலியாகியுள்ளதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி கருத்துத் தெரிவிக்கையில், இது ஒரு பெருந்துயரம் எனக் கவலை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.4tamilmedia.com/newses/world/4053-3-1
http://www.4tamilmedia.com/newses/world/4053-3-1
Geen opmerkingen:
Een reactie posten