தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 maart 2012

'கொலைக் களங்கள்- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' எதிராக 'பயங்கரவாதத்தின் நிழல்கள்' இலங்கையினால் வெளியீடு!

செனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட, “இலங்கையின் கொலைக் களங்கள்- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” ஆவணப்படத்திற்கு எதிரான வகையில் 'பயங்கரவாதத்தின் நிழல்கள்' (shadows of terror) என்ற காணொளி இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி, 'பயங்கரவாதத்தின் நிழல்கள்' (shadows of terror) என்ற காணொளியானது பாதுகாப்பு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு, ஆதரவு திரட்டும் வகையிலேயே இந்தக் காணொளியினை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmqyDSdPdjwz.html




பிரதமரின் அறிவிப்பு பயனற்ற மழுப்பல்: ஜெ.
[ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 08:55.21 PM GMT ] [ பி.பி.சி ]
பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அறிவிப்பு "மழுப்பலான, பயனில்லாத பதில்" என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்த தெளிவற்ற அறிவிப்பைச் செய்துள்ளார் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten