இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTV யில் சூடான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஜனதா கட்சித் தலைவரும் புலிகள் எதிர்ப்புவாதியுமான சுப்ரமணியசுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மியூனிஸ் கட்சி ராஜா, மனித உரிமை ஆர்வலர் கங்கூலி, ஊடகவியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச்சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயன சாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக மிக நீண்டநேரம் நடைபெற்ற முதல் விவாதம் இதுவேயாகும்.
முதலில் பேசிய ஆலோசகர் நாராயனசாமி அவர்கள், இலங்கையின் போர்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்துபேசிய சுபிரமணியசுவாமி, புலிகளை மிகவும் சாடினார். பாலச்சந்திரன் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். அங்கே பேசிய பார்த்தசாரதியும் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார். ஆனால் கம்மிபூனிஸ் கட்சியின் டீ.ராஜா அவர்கள் பேசும்போது, இலங்கை மேல் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வாதிட்டார். இதில் லண்டனில் இருந்து காலம் மக்ரே அவர்கள் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்தார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் அவர்களும் இலங்கை போர்குற்றம் தொடர்பாக காத்திரமான விடையங்களைக் கூறியிருந்தார்.
இந்தியாவின் பல மூத்த அரசியல்வாதிகள் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில், இலங்கை தொடர்பான விவாதம் குறித்த நேரத்தில் NDTVல் இடம்பெற்றது இந்திய அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten