தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 maart 2012

சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் - 2 . தண்டிக்கப்படாத போர் குற்றங்கள்!



பிரித்தானிய ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் பற்றிய காணொளி உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உலக நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் என ஜெனிவா முதல் நியூ யோர்க் வரை அதிச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இக்காணொளி.


சேனல் 4 ல் வெளியான இலங்கையின் கொலைக்களம் பாகம் 2 ல் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட அனைத்து விடயங்களையும் எழுத்துவடிவில் கட்டுரையாக உங்கள் பார்வைக்கு தொகுத்துள்ளோம். காணொளியை பார்க்க மனமில்லாதவர்கள் அல்லது இளகிய மனம் கொண்டவர்கள், இந்த கட்டுரையின் மூலமாக என்ன காட்டப்பட்டது , சொல்லப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.


கடந்த 26 ஆண்டுகாலமாக தனி நாடு கேட்டு போராடிவந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையேயான மிகப்பெரிய பாரிய தாக்குதல் கடந்த 2009 ஆம் ஆண்டு மூண்டது. பல அப்பாவி பொது மக்களை காவுகொண்ட இச்சம்பவம் தொடர்பாக உலகுக்கு தெரியாத, இலங்கை அரசு யுத்தம் என்ற போர்வையில் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு துஷ்பிரயோக நடவடிக்கைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது சனல் 4 தொலைக்காட்சி.


யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட பகுதிகளில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளது இலங்கை அரசு.தொடர்ந்து வைத்தியசாலைகளிலும், மக்கள் தங்கியிருந்த பதுங்கு குழிகளிலும் குண்டுகள் வீசப்பட்டு அப்பாவி தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர்.


யுத்தத்தின் இறுதி நாட்களில் சுமார் 60 ,000 மக்கள் மட்டுமே கொல்லப்படதாக கூறியுள்ளது இலங்கை அரசு. ஆனால் இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.மேலும் பல பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்களுக்கு நேர்ந்த கதி என்னவென்பது பற்றி எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.


யுத்தத்தின் முடிவில் பல இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டு, தமிழ் மக்களின் தனி நாட்டு கோரிக்கையை தற்காலிகமாக பின்னடைய வைத்து போரிலே வெற்றி பெற்றது இலங்கை அரசு. இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பல ஆயிரம் பொது மக்களை விசாரணை என்ற பெயரில், படுகொலை செய்துள்ளது இலங்கை அரசு.


விடுதலை புலி பெண் போராளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ளது இலங்கை அரசு. பல போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இலங்கை இராணுவ வீரர்களால் சுடப்படும் காட்சிகளை காணொளியாக வெளியிட்டது பிரித்தானிய ஊடகம் சனல் 4 .


இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இக்காணொளி தொடர்பாக கூறியபோது, தன்னுடைய 28 வயதுடைய மகன் இந்த காணொளியை பார்த்துவிட்டு, தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒரு இலங்கை சிங்களவனாக நான் இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாக கூறியதாக இலங்கையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியின் போது கூறியுள்ளார்.


இப்போது புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது சனல் 4 தொலைக்காட்சி. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் என்ற பகுதியில் தற்காலிக மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து அதில் போரின்போது காயமடைந்த பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் இரண்டு சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள்.


பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசு அறிவித்த பகுதிகளில், மீண்டும் குண்டு மழை பொழிந்தது இலங்கை அரசு.பாதுகாப்பு வளையத்தில் இருந்த பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பு தேடி நாலா பக்கமும் சிதறி ஓடினர்.மக்கள் தங்கியிருந்த தற்காலிக வைத்தியசாலை மற்றும் பதுங்கு குழிகளில் தொடந்து குண்டு மழை பொழிந்தது இலங்கை அரசு.


இதுதொடர்பாக இலங்கை இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா கூறியபோது,இவ்வாறான தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை இராணுவம் பொறுப்பல்ல என்றும் விடுதலை புலிகளே பாதுகாப்பு வளையத்தை நோக்கி குண்டுத்தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.ஆனால் இத்தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் சந்தேகத்திற்கிடமில்லாமல் இத்தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை 100 விழுக்காடுகள் உறுதி செய்திருந்தது.


இவ்வாறான இத்தாக்குதலின் போது பாதுகாப்பு வளையத்தில் தங்கியிருந்த சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் அவர்களுடைய தூதரகங்கள் மூலம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அரசியல் ஆலோசகர் கோத்தபாய இராஜபக்சே ஆகியோரை தொடர்பு கொண்டு மீண்டும் இவ்வாறான தாக்குதல்களை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.அதன்பின்னர் குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை இலங்கை அரசு.


ஆனால் பாதுகாப்பு வளையம் என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் குண்டு வீசத் தொடங்கியது இலங்கை அரசு.அப்பாவி தமிழ் மக்களை கொல்ல வேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோளுடன் மக்கள் தங்கியிருந்த பதுங்கு குழிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இலங்கை அரசு.


தொடர்ந்து இலங்கை அரசால் மேற்கோள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேறு இடம் நாடி தம் உடைமைகளுடன் வெளியேறிய அப்பாவி தமிழ் மக்களுக்கு இன்னுமொரு சிறிய பாதுகாப்பு வளையத்தை அறிவித்தது இலங்கை அரசு.மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அச்சிறிய பகுதியில் முடக்கப்பட்டார்கள்.


இலங்கை அரசு அறிவித்தபடி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் தொகை 60 .000 என அறிவித்திருந்தது.ஆனால் செய்மதியூடாக விபரங்களை சேகரித்த ஐக்கிய நாடுகள் சபை, அங்கிருந்த மொத்த மக்கள் தொகை ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்பதை உறுதிப்படுத்தியது.


அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இலங்கை அரசால் நிராகரிக்கப்படிருந்தது.இது குறித்து அங்கிருந்த வைத்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அங்கிருந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான மருந்துகள் இல்லாத நிலையில், இலங்கை அரசிடம் எவ்வளவோ கேட்டும் பயனில்லை என்றார்.


இதுகுறித்து இலங்கை அதிபர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பாதுகாப்பு வளையத்திலுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான எல்லா உதவிகளும் வழங்கப்படுள்ளதாக கூறியுள்ளார்.இதனால்தான் மிக கூடிய விரைவில் எல்லா மக்களையும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.அத்துடன் பாதுகாப்பு வளையத்திலுள்ள மக்கள் தொகை 5 ,000 முதல் 10 ,000 வரையே இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தார்.


இரண்டாவது பாதுகாப்பு வளையத்திலிருந்த மக்கள் தொடர்ந்து முன்னேறி இலங்கை இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள இடத்திற்கு சென்றுள்ளனர்.அங்கு மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற பெயரில், பல ஆயிரம் போது மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொண்டுள்ளது இலங்கை இராணுவம்.அத்துடன் பல மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால், அதிகளவிலான இரத்தப்போக்கு காரணமாக மக்கள் இறக்க நேரிட்டது.இது முற்றிலுமான போர்க்குற்றமாகும்.


பல அப்பாவித் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கி கொன்று புதைத்துள்ளனர்.குறிப்பாக இலங்கை அரசால் போராளி என் அடையாளம் காண்பிக்கப்பட்ட புலிகளின் குரல் வானொலி செய்தி வாசிப்பாளர் மேதகு செல்வி இசைப்பிரியாவை கடுமையான முறையில் தாக்கி கொன்றுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் மேதகு தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகனான பன்னிரண்டு வயேதான செல்வன் பாலச்சந்திரன் பிரபாகரனை கொடுங்கோல் சிங்கள அரசு சுட்டுக் கொன்றுள்ளது .தன்னுடைய மெய்ப்பாதுகாவலர் ஐந்து பேருடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய வந்த அவரை, கைது செய்த சிங்கள அரசு, மேதகு பிரபாகரன் பற்றிய விபரங்களை கேட்டு அறிந்த பின்னர் சுட்டுக்கொன்றுள்ளனர்.இது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போர்க்குற்றமாகும்.


விடுதலைப்புலிகளினுடனான போரில் வெற்றிபெற்ற இலங்கை அரசு மிக பெரியளவில் தனது வெற்றியை அப்பாவித் தமிழ் மக்களின் இறந்த உடல்களின் மீதும் அவர்களது இரத்தத்தின் மீதும் வைத்து கொண்டாடியுள்ளனர். தமிழ் மக்கள் கொத்துகொத்தாக கொன்றழிக்கப்பட்டதற்கு இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் துணை போயின.அப்பாவித் தமிழ் மக்களை கொன்றழிப்பதற்கு காரணமான அத்தனை நாடுகளும் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.


அமெரிக்காவால் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையில் அனைத்து நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம், கொன்றழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களின் குறுகிய கால அபிலாஷையை தீர்க்கமுடியும்.
http://www.newsalai.com/2012/03/4-2.html 





சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம் - 2 வெளியானது (காணொளி இணைப்பு)




உலகமே எதிர்பார்த்திருந்த இலங்கையின் கொலைகளம் காணொளி இன்று சேனல் ௪ நிறுவனம் வெளியிட்டது. இதுவரை வெளிவராத இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை காட்சிகள். இலங்கையின் கோர முகம் தோலுரிக்கப் பட்டது. இறந்த பின்பும் நீதி கேட்கும் தமிழீழ தலைவரின் மகன் பாலச் சந்திரன். சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் - 2 . தண்டிக்கப்படாத போர் குற்றங்கள்.

Geen opmerkingen:

Een reactie posten