தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 maart 2012

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள்!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேற்குலகம், ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா ஆகியவற்றின் மத்தியஸ்தம் மூலம் சரண் அடையலாம் என்று பிரபாகரன் நம்பி இருந்திருக்கின்றார் என்றும் யுத்த களத்தில் இருந்து புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பாக தப்பிச் செல்கின்றமைக்கு இச்சரண் அடைதல் திட்டம் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்று விசுவாசித்து இருந்தார் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட கூடிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் போரை கை விடுகின்றமையை தவிர இவரிடம் மாற்று வழி இருந்திருக்க முடியாது.

தப்பிச் செல்கின்றமைக்காக பிரபாகரன் வெளிநாட்டு மீட்பு கப்பல் ஒன்றின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் என்றும் இக்கப்பல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்று நம்பி இருந்தார் என்றும் போரை எதிர்காலத்தில் நடத்த உயிர் வாழ வேண்டும் என்று நினைத்து இருந்தார் என்றும் ஏராளமானவர்கள் நம்புகின்றார்கள்.
ஆனால் அரச படையினரிடம் சரண் அடைந்த பிற்பாடு பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்று மிகவும் நம்பகரமாக தற்போது தெரிய வந்து உள்ளது.

மனைவி மதிவதனி, மக்கள் துவரகா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருடன் பிரபாகரன் இராணுவத்திடம் சரண் அடைந்து இருக்கின்றார்.

இவர்களை இராணுவத்தினர் சில நாட்கள் அரச காவலில் தடுத்து வைத்திருந்து இருக்கின்றனர். ஆனால் இவ்விடயத்தை மிகவும் இரகசியமாக வைத்து இருந்திருக்கின்றனர். குறிப்பாக தலைவர் சரண் அடைந்தமை தமிழர்களுக்கு தெரிய வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கின்றனர்.

பிரபாகரனும் குடும்பத்தினரும் சில நாட்களுக்கு பின் படுகொலை செய்யப்பட்டு நந்திக் கடல் பிரதேசத்தில் வீசப்பட்டு இருக்கின்றனர்.

பிரபாகரன்தான் கடைசியாக கொல்லப்பட்டு இருக்கின்றார். பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி யுத்த களத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றபோது சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு இருக்கின்றார். குடும்பத்தினர் படுகொலை செய்யப்படுகின்றமை பிரபாகரனுக்கு காண்பிக்கப்பட்டு இருக்கின்றது.

பிரபாகரனின் குடும்பம் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டது என்று இலங்கை அரசு முதலில் அறிவித்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மறுநாள் சடலங்களை கண்டுபிடித்தனர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நந்திக் கடலை கடக்க முயன்றபோது மே 19 ஆம் திகதி அதிகாலைதான் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் இன்னொரு செய்தி கூறுகின்றது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்கிற செய்தியை இராணுவ தளபதி சரத் பொன்சேகா மதியம் 12. 15 மணிக்கு அறிவித்தார். அறிவிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்துக்கு இடையில் பிரபாகரனின் உடல் இலங்கை ரி.வியில் காண்பிக்கப்பட்டு விசேட செய்தி அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசின் அறிவிப்புக்கும், ரி.வியில் காண்பிக்கப்பட்ட சடலத்தின் காட்சிப்பாட்டுக்கும் இடையில் பொருத்தப்பாடுகள் கிடையாது.

பிரபாகரனின் தலையில் இருந்து ஒழுகிய இரத்தம் தண்ணீருடன் கலப்பது தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

மரணம் ஒன்று இடம்பெற்று விட்டால் பொதுவாக 25 – 30 நிமிடங்களுக்கு இடையில் இரத்த பெருக்கு நின்று விடும், இது காயத்தின் அளவைப் பொறுத்து இருக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த முன்னணி சத்திர சிகிச்சை நிபுணர் ரி. கே. நீலமேகம். இவரது இக்கருத்துடன் தடவியல் ஆய்வு நிபுணர்கள், வைத்திய நிபுணர்கள் நிச்சயம் இணங்கியே ஆவர்.

சுட்டுக் கொல்லப்பட்டு பல மணி நேரத்துக்கு பின்புதான் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது என்று இலங்கை அரசு கூறுகின்றது. ஆனால் உண்மையில் படுகொலை செய்யப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே தொலைக்காட்சி வீடியோ காண்பிக்கப்பட்டு இருக்கின்றது

http://www.manithan.com/view-2012031316824.html 

Geen opmerkingen:

Een reactie posten