குறித்த பிரதேச பகுதியை ஆராயும் போது ஏற்கனவே அப்பகுதியில் பொதுமக்கள் வாழ்ந்ததடயங்கள் காணப்படுகின்றது.
எனினும் அந்த பிரதேச வாசிகள் யுத்தம் காரணமாக பத்து வருடங்களுக்கு முன்னர் அங்கிருந்துவெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளது.
பலவருடங்களாக இராணுவத்தினரின் நடமாட்டங்கள் குறித்த பிரதேசத்தில் அதிகமாககாணப்பட்டதினால் பொதுமக்கள் மீளக்குடியேறுவதில் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக அவர்களுக்கு நெடுங்கேணி பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இராணுவப்படை முகாங்கள் அமைத்திருந்த தடயங்கள் தற்பொழுதுகாணப்படுகின்றது. குறிப்பாக ஒரு இடத்தில் பழமை வாய்ந்த கிணறு ஒன்று மூடியநிலையில் காணப்படுகின்றது.
குறித்த மர்ம கிணற்றுக்குள் என்னதான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடிய விரைவில் மர்மங்களின் முடிவு வெளிச்சத்திற்கு வரும் எனவும் நம்பப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten