இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிஸ்சர்லாந்து நீதி அமைச்சருடன், வருகை தந்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புமளவுக்கு நாட்டில் நிலமை மாற்றமடையவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து நடாத்தும் ஆட்சியிலும் 17 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வடக்கு முதல்வர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் வரைக்கும் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்தும் சுமுகமான நிலைமைக்கு வந்துவிட்டதாக நான் கூறவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் கூறியது. எனினும் அது இன்னமும் நீக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதிக்கு பின்னரும் கூட தாக்குதல், துன்புறுத்தல் தொடர்பில் 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமை முன்னர் இருந்ததை விட மிகவும் மேம்பட்டுள்ளது. ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
எனினும் யுத்தத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது என என்னால் கூற முடியாது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாவிடின், நபர்களைக் கைதுசெய்து நீண்டகாலம் தடுத்துவைத்து கடுமையான முறையில் வழக்குகள் பதிவுசெய்யப்படும்.
ஏற்கனவே உள்ள அரசியல் கைதிகள் விடயத்திலும் இதுவே நடைபெறுகின்றது என தெரிவித்தார். இந்த கேள்விக்கு சாதகமான பதிலை வழங்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்னைத் தடுக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சாதாரண சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவந்தால் அவர்களை தடுத்து வைத்து, 15 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள்?
20 வருடங்களுக்கு என்ன செய்தீர்கள்? 5 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள் என விசாரணை செய்வார்கள். பாரபட்சம் காட்டப்பட்டமையே அவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முன்னுரிமை அளித்தது.
ஆகவே அவர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். முதன்மையாக பயங்கரவாத தடைச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்.
வேறு ஒரு முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் இருக்க வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் அனைவரும் நாட்டிற்கு வரலாம். அவர்கள் வரவேண்டும். அவர்களை நாங்கள் வரவேற்போம் என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுவிஸ்சர்லாந்து மற்றும் இலங்கைக்கும் இடையில் அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இருதரப்பு உடன்படிக்கை ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this video
Geen opmerkingen:
Een reactie posten