தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 oktober 2016

யாழில் பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டிய ஜேர்மனிய பெண்ணின் விபரம் வெளியானது…

சுன்னாகத்தில் பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டியவர் மனநிலை பாதிக்கப்பட்டவராம் கடந்த திங்கட்கிழமை இரவு மருதனார்மடம் பேருந்து தரிப்பிடத்தில் தேசியத் தலைவரின் படத்தினை ஒட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு மனநோயாளியென தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் இல்லையெனவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தொடர்பாக ஜேர்மனியில் வசிக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகப்புப் புத்தகத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, குறித்த பெண்ணின் குடும்பத்தினர் 1980 ஆண்டு காலப்பகுதியில் தோன்றிய இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டு குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் மரணமடைந்துள்ளனர். திருமண வாழ்வும் அவருக்கு கசப்பை ஏற்படுத்தியதால் ஜேர்மனியில் அவர் தனது பிள்ளைகளையும் பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளார்.
தனியாக வாழ்ந்து வந்த தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அவர் இலங்கை சென்றதும் அங்கே தலைவர் பிரபாகரனின் படத்தினை தானே ஒட்டிவிட்டு தானே சரணடைந்துள்ளார். அத்துடன், கைதுசெய்யப்பட்ட இவர் நான் மீண்டும் மீண்டும் ஒட்டுவேன் எனவும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்.
மேலும், அவருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை. அத்துடன், அவர் அவர்களுக்காக எந்த வேலையும் செய்தவருமல்ல. ஆனால் அவர் போரினால் தனது குடும்ப உறவுகளை இழந்த குடும்பத்திலிருந்துவந்தவர் என்பது மட்டுமே உண்மை.
அவர் மனவிரக்தியுற்று தற்கொலை செய்யும் நோக்கத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் அப்பெண் தனது முகப்புப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten